
சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் வைத்தியர் ஷாபி
சில அதிகாரிகள் உயர் பதவிகளைப் பெறுவதற்காக தன்னைப் பலிக்கடா ஆக்கினர். இது போன்ற அநீதி மற்றவர்களுக்கு ஏற்படாத வகையில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷிஹாப்தீன் மொஹமட் ஷாபி தெரிவித்துள்ளார் .
குருணாகல் நீதிவான் நீதிமன்றம் நேற்று புதன் கிழமை வைத்தியர் ஷிஹாப்தீன் மொஹமட் ஷாபித்தை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்து அவருக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டிருந்தது.
இதன் பின்னர் வைத்தியர் ஷாபி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில்மேலும் தெரிவிக்கையில்,
சிலரின் சொந்த நலன் காரணமாக பொய்க் குற்றச்சாட்டின் பேரில், நானும் என் குடும்பமும் ஐந்து வருடங்களும் ஆறு மாதங்களும் அனுபவித்த துன்பங்கள் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளன .
இது எனக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல, இலங்கையில் நீதிக்காக போராடியவர்களுக்கும் அதற்காக நின்றவர்களுக்கும் கிடைத்த வெற்றியாக நான் கருதுகிறேன், என்றார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
