சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வு: இருவர் கைது

பசறை கோணகல பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் அனுமதி பத்திரம் இன்றி மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட 19,26 வயதுடைய இருவரை பசறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து மாணிக்கக் கல் அகழ்விற்கு பயன்படுத்தப்படும் சில உபகரணங்கள் கைப்பற்றப் பட்டுள்ளதுடன் இவர்கள் மீதும் வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.