
சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது
களுகங்கை காசல்ரீ நீர்த்தேக்க பகுதிகளில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வு பணியில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நோர்வுட், கண்டி, கிருலப்பனை மற்றும் எஹலியகொடை உள்ளிட்ட பிரதேசங்களை சேர்ந்த 28, 43, 47, 60 வயதுடையவர்களே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வுட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
