சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!

பசறை தொளும்புவத்தை மற்றும் வராதொலை பகுதிகளில் சட்ட விரோதமான அனுமதி பத்திரம் இன்றி மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரை பசறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தொளும்புவத்தை மற்றும் வராதொலை பகுதியை சேர்ந்த 34 மற்றும் 40 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு சந்தேக நபர்களையும் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்