
சட்டவிரோத மதுபான உற்பத்திக்கான பொருட்களுடன் ஒருவர் கைது
வடக்கு களுத்துறை பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி பொருட்களுடன் சந்தேக நபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்பிடகொட பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட 1800 லீற்றர் கோடா, 50 லீற்றர் சட்டவிரோத மதுபானம், 4 எரிவாயு சிலிண்டர் மற்றும் 2 எரிவாயு அடுப்புகள் ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வடக்கு களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
