சட்டவிரோத மதுபானம் அருந்தி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபருக்கு தடுப்பு காவல்
வென்னப்புவ பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்தி எழுவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை 2 நாள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேக நபரை கடந்த 7ஆம் திகதி கைதுசெய்து நேற்று (08) மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட இரு சந்தேகநபர்கள் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு, கடந்த 7ஆம் திகதி மாரவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
