சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது!

-முல்லைத்தீவு நிருபர்-

பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பூநகரி குடமுருட்டி ஆற்றுப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறித்த பகுதியை மணல் அகழ்வுக்கு தடை செய்து தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று புதன்கிழமை நான்கு டிப்பர்கள் மணல் அகழ்வில் ஈடுபடுவதாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி விசேட குற்ற தடுப்பு பிரிவினருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக நான்கு டிப்பர்களுடன் சாரதிகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்

அத்துடன் ஜெயபுரம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பாலை மர குற்றிகளுடன் பயணித்த வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

பறி முதல் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றுமு; கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பூநகரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விசேட பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர்