சட்டவிரோத மணலை ஏற்றி சென்ற ரிப்பரை 40 கிலோமீற்றர் துரத்திச் சென்று கைப்பற்றிய பொலிஸார்!
-யாழ் நிருபர்-
அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற ரிப்பரை, 40 கிலோமீற்றர் வரை துரத்திச் சென்று பருத்தித்துறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்
பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்லிபுரம் பகுதியில் இன்று புதன்கிழமை, அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் வாகனத்தை பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர்.
எனினும் டிப்பர் சாரதி வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார்.
சுமார் நாற்பது கிலோமீற்றர் வரை குறித்த டிப்பரை பொலிஸார் துரத்தி சென்ற நிலையில், தப்பிக்க முடியாத நிலையில் டிப்பர் சாரதி ரிப்பரை நிறுத்திவிட்டு, தப்பிச் சென்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, ரிப்பரை பருத்தித்துறை பொலிஸார் கைப்பற்பற்றியுள்ளதுடன், தப்பிச் சென்ற சாரதியை கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றும் இன்றுமாக சட்டவிரோதமாக மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவை தொடர்பான தீவிர விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்