சட்டவிரோத தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட இளைஞன் கைது

குருணாகல் – மொரகொல்லாகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றின் அறையில் சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட சந்தேகத்தில் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரகொல்லாகம பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் போது அகழ்வுக்கான உபகரணங்கள் மற்றும் பூஜை பொருட்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மூன்று சந்தேக நபர்கள் தப்பிச்சென்றுள்ளதாகவும் இது தொடர்பான தகவல்கள் கிடைத்தவுடன் அவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மொரகொல்லாகம பொலிஸார் மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்