
சட்டவிரோத செயல்: தடுக்கச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல்
வாகரை, பகுதியில் நேற்று புதன் கிழமை பிற்பகல் சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸ் குழுவினர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் மூன்று சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
கதிரவெளி பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோத மதுபானம் காய்ச்சப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸ் குழுவினர் மீது வீட்டின் உரிமையாளர் உள்ளிட்ட சந்தேக நபர்கள் தாக்குதல் நடத்தியதில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் வாகரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து வீட்டின் உரிமையாளர் உட்பட மூன்று சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வீட்டின் குளியலறையில் பல சட்டவிரோத மதுபானம் மற்றும் மதுபானம் தயாரிக்கும் உபகரணங்களை கண்டெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
