சட்டவிரோத செயல்பாட்டில் ஈடுபட்ட டிப்பர் வாகனங்கள் பொலிஸாரால் மீட்பு

-கிளிநொச்சி நிருபர்-

கிளிநொச்சியில் சட்டவிரோதமான செயல்பாட்டில் ஈடுபட்ட கனரக டிப்பர் வாகனங்களை பொலிஸார் கைப்பற்றி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

கிளிநொச்சியில் அண்மைக்காலமாக சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரித்து வரும் நிலை காணப்படுகின்றது.

அனுமதி பத்திரம் இல்லாமல் சட்ட விரோத மணல் அகழ்வுகள் மற்றும் அனுமதி பத்திரம் வைத்திருக்கும் நிலையில் மணல் அகழ்வில் ஈடுபடும் வாகனங்கள் போக்குவரத்திற்கு இடைஞ்சல் விளைவிக்கும் வகையிலும் பயணிகளுக்கு அசௌகரியங்களை விளைவிக்கும் வகையிலும் செயற்படுதல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கனரக டிப்பர் வாகனங்களே இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.

வீதி போக்குவரத்து பொலிஸார் மற்றும் விசேட குற்ற தடுப்பு பொலிஸாரும் இணைந்து இவ்வாறான சட்டவிரோத செயற்படுகளில் ஈடுபடும் வாகனங்களை கைப்பற்றி வருகின்றனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள கனரக வாகனங்கள் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்