சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க இராணுவத்தை பயன்படுத்துமாறு இங்கிலாந்து பிரதமருக்கு ட்ரம்ப் பரிந்துரை

சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க இங்கிலாந்தின் பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு இராணுவத்தைப் பயன்படுத்தலாம் என டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியின் இரண்டாவது உத்தியோகப்பூர்வ இங்கிலாந்து விஜயத்தின் நிறைவைக் குறிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போது , ட்ரம்ப் இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளார்.

இங்கிலாந்து பிரதமருடனான சந்திப்பின் போது இடம்பெயர்வு பிரச்சினைகள் தொடர்பிலும் விவாதித்ததாக ட்ரம்ப் இதன்போது தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் எல்லைகளைப் பாதுகாப்பதற்கான தனது கொள்கைகளைப் பற்றி அமெரிக்க ஜனாதிபதி தமது அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார்.

அத்துடன், சிறிய படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் புலம்பெயர்ந்தோருடன் இங்கிலாந்து இதேபோன்ற சவாலை எதிர்கொள்வதாகவும் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.