சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

-கிளிநொச்சி நிருபர்-

கிளிநொச்சி தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் தடையப் பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடமிருந்து 45 லீற்றர் கசிப்பு,  இரண்டு லீற்றர் கோடா , 11 டின் பியர் மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பவை கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று சனிக்கிழமை கிளிநொச்சி நீதிமன்றல் முற்படுத்தப்படவுள்ளதாக தர்மபுர போலீஸ்பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்