சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரத்தடிகளுடன் ஒருவர் கைது!
-கிளிநொச்சி நிருபர்-
அனுமதி இன்றி காட்டுக்குள் உட்புகுந்து சட்டவிரோதமான முறையில் பெறுமதிமிக்க மரதடிகளை வெட்டி கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெட்டப்பட்ட தடிகளை நள்ளிரவு வேளையில் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் கொண்டு செல்லும் வழியில் மரத்தடிகளை பறிமுதல் செய்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கிளிநொச்சி நீதிமன்றம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திசநாயக்க தெரிவித்துள்ளார்
