சட்டவிரோதமாக வீதியில் மோட்டார் சைக்கிள் போட்டி: ஆபத்தான நிலையில் இளைஞர்கள்

-அம்பாறை நிருபர்-

அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் சிக்கி இருவர் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நிந்தவூர் வைத்தியசாலை வீதியிலிருந்து பிரதான வீதியினை நோக்கி காலை நான்கு இளைஞர்கள் இரு மோட்டார் சைக்கிள் மூலம் சட்ட விரோதமான முறையில் ரேஸ் ஓடிய வேளை வேக கட்டுப் பாட்டினை இழந்தமையினால் ஜும்ஆ பள்ளிவாசல் சுவர் பகுதியில் மோதுண்டுள்ளனர்.

இந்த விபத்தில் இரு இளைஞர்கள் பலத்த காயங்களுடன் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.