-கிளிநொச்சி நிருபர்-
புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள மரத்தளபாட உற்பத்தி நிலையத்திற்கு அனுமதிப்பத்திரம் இன்றி முதிரை மரக்குற்றிகளை ஏற்றி வந்த 3 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை முதிரை மரக்குற்றிகளை ஏற்றி வந்த வாகனங்களை பொலிஸார் கைப்பற்றினர்
வாகனங்கள் மற்றும் மரக்குற்றிகளை மீட்ட பொலிஸார் மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.
கைப்பற்றப்பட்ட சான்று பொருட்கள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நாளை புதன்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.




