
சட்டவிரோதமாக மண் ஏற்றிச் சென்ற இரண்டு டிப்பர்களுடன் இருவர் கைது
-யாழ் நிருபர்-
யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாள் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற இரண்டு டிப்பர் வாகனங்கள் கொடிகாமம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கிளாலி பகுதியிலிருந்து கொடிகாமம் நோக்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் சட்டவிரோத மணலுடன் சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனங்களே பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் நேற்றையதினம் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
