சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று டிப்பர்கள் மடக்கி பிடிப்பு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-32 வீதியூடாக, சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச்சென்ற மூன்று டிப்பர் வாகனங்களை, கடந்த சனிக்கிழமை சாவகச்சேரி  பொலிஸார் கைப்பற்றியதுடன், அதன் சாரதிகளையும் கைது செய்துள்ளனர்.

அனுமதிப்பத்திரம் பெற்ற மணலை மேலே பரவி, அதன் கீழாக வெள்ளை மணலை ஒழித்து வைத்து கடத்திச் சென்ற டிப்பர் வாகனங்களே, இவ்வாறு கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்