சட்டவிரோதமாக பிரான்ஸ்க்கு செல்ல முற்பட்ட 50 பேர் கைது

சட்டவிரோதமாக படகு மூலம் பிரான்ஸ்க்கு செல்ல முற்பட்ட சுமார் 50 பேர் வென்னப்புவ- கொலிஞ்சாடிய பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை  கைது செய்யப்பட்டுள்ளனர்.

பஸ் மற்றும் வான் ஒன்றில் பயணித்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 6 பெண்களும் நான்கு குழந்தைகளும் அடங்குவதுடன் சிலாபம், மாரவில, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.