சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் மீட்பு

நீர்கொழும்பு கெப்பும்கொட கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது நேற்று சனிக்கிழமை இவை மீட்கப்பட்டுள்ளன.

கெப்பும்கொட கடற்கரை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டபோது அதில் 53 பைகளில் அடைக்கப்பட்ட 1650 கிலோ 500 கிராம் எடைக்கொண்ட பீடி இலைகள் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைப்பட்டுள்ளன.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்