சட்டவிரோதமாக சேர்த்த அதிக மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்!

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும், ஆணொருவரும், பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்

மேலும், அவர்களது அதிக மதிப்புள்ள சொத்துக்கள் பல, இலங்கையின் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு 08, பொரளை பகுதியைச் சேர்ந்த 43 மற்றும் 45 வயதுடைய குறித்த சந்தேக நபர்கள் இருவரும் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டள்ளனர். அவர்களிடம் உள்ள சொத்துக்கள் அனைத்தும் சட்டவிரோதமாக உழைத்த பணத்தில் வாங்கப்பட்டவை என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் விபரம்

* கந்தானையில் நான்கு மாடி வீடு (A four-storey house in Kandana)
* கொழும்பு 08, பொரளையில் இரண்டு இரண்டு மாடி வீடுகள் (Two two-storey houses in Borella, Colombo 08)
* கொழும்பு 08, பொரளையில் மூன்று மாடி வீடு (A three-storey house in Borella, Colombo 08)
* ஜப்பானிய ஆல்டோ வாகனம் (A Japanese Alto vehicle)
* வேகன் ஆர் வாகனம் (A Wagon R vehicle)

புலனாய்வுப் பிரிவு, பணமோசடி சட்டத்தின் கீழ் சட்டவிரோத சொத்துக்கள் பறிமுதல்களை மேற்கொண்டது.

மேலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.