சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட தொலைபேசிகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களுடன் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலன்னாவ பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, 500க்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகள், 10 ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் மற்றும் 15 உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.