சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மாட்டு இறைச்சி
-பதுளை நிருபர்-
சட்டவிரோதமான முறையில் அனுமதி பத்திரம் இன்றி முச்சக்கர வண்டியில் 45 கிலோ கிராம் மாட்டு இறைச்சி கொண்டு சென்ற ஒருவரை ஆக்கரத்தன்னை விஷேட அதிரடி படையினர் கைது செய்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது பசறை ஹத்கம்நிவச பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த காலங்களில் பசறை பகுதியில் அதிக அளவான பசு மாடுகள் காணாமல் போவதாக பசறை பிரதேச மக்களினால் மொனராகலை பிராந்திய விஷேட அதிரடி படையினரின் தளபதி குணசிறிக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய உதவி பொலிஸ் அத்தியட்சகர் அசோகவின் ஆலோசனைக்கு அமைய பசறை ஆக்கரத்தன்னை விஷேட அதிரடி படையின் தளபதி ஹேமவன்ஸ தலைமையினாலான குழுவினர் சுற்றிவளைப்பினை மேற்கொண்ட போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் உட்பட மாட்டிறைச்சி மற்றும் முச்சக்கர வண்டியை பசறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்