
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட கார் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது!
கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்ற சட்டவிரோத கார் இறக்குமதி முயற்சியை சுங்க அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.
மறுசீரமைக்கப்பட்ட Toyota Prius கார் ஒன்றை ஜப்பானில் இருந்து 40 அடி கொள்கலனுக்குள் மறைத்து கொண்டு வந்த வேளை சுங்க அதிகாரிகள் குறித்த காரை நேற்று வெள்ளிக்கிழமை கைப்பற்றினர்.
கடந்த நவம்பர் தொடக்கத்தில் இலங்கைக்கு வந்த குறித்த கொள்கலன் சந்தேகத்தின் பேரில் சுங்கப் பிரிவினரால் பிடித்து வைக்கப்பட்டிருந்தது.
குறித்த கொள்கலனுக்கு சொந்தமாக இறக்குமதியாளர் குறித்த கொள்கலனை பெற்றுக்கொள்ள வராத நிலையில் இது தேங்கி கிடந்தது.
இந்நிலையில் சுங்க அதிகாரிகள், சம்மந்தப்பட்ட இறக்குமதியாளரை வரவழைத்து, கொள்கலனை திறந்து பார்வையிட்ட போது, சட்டவிரோதமான முறையில் குறித்த கார் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டமை தெரிய வந்துள்ளது.
