சட்டம், ஒழுங்கு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை – நாமல்
இலங்கையில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கவலை தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை விட்டு நழுவுவதாகத் தோன்றுகிறது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனது எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சில தேசிய மக்கள் சக்தி அமைச்சர்கள் தினசரி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நின்றுவிட்டதாகக் கூறினாலும், “சில குழுக்களுக்கு ஏற்றவாறு கொலைகள் தொடர்ந்து மீண்டும் நிகழ்கின்றன” என்றும் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சம்பவங்களை அரசாங்கம் அவசரமாக திட்டமிட்ட குற்றக் குழுக்களுடனும், போதைப்பொருள் நடவடிக்கைகளுடனும் தொடர்புபடுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
