சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்தை யோசனையை பரிசீலிப்பேன்- ஜனாதிபதி
தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலையை தீர்ப்பதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள யோசனை திட்டங்களை, ஆராய்ந்து அரசியலமைப்பிற்கு இணங்க செயற்படுவது குறித்து தாம் பரிசீலிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினர் 13 முக்கிய யோசனைகளை அதன் நிறைவேற்று சபையில் முன்வைத்து ஏகமனதாக நிறைவேற்றியது.
இந்த யோசனைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது. குறித்த யோசனைகளை ஆராய்ந்து அரசியலமைப்புக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
