சடுதியாக குறைந்தது மரக்கறிகளின் விலை

மரக்கறிகளின் விலை சடுதியாக குறைவடைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, கரட் கிலோவொன்று 400 ரூபாயாகவும், போஞ்சி கிலோவொன்று 400 ரூபாயாகவும், தக்காளி 320 ரூபாயாகவும், வெண்டைக்காய் 300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தரிக்காய் கிலோ ஒன்று 250 ரூபாயாகவும், பீட்ரூட் 500 ரூபாயாகவும், உருளைக்கிழங்கு 220 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

இதேவேளை, கொழும்பு மெனிங் சந்தையில் போஞ்சி கிலோ ஒன்று 300 ரூபாயிற்கும், கரட் கிலோ ஒன்று 300 ரூபாயிற்கும், பச்சை மிளகாய் கிலோ ஒன்று 300 ரூபாயிற்கும் விற்பனை செய்யப்படுவதாக மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.