சங்கு சின்னம் தனியொரு கட்சியின் சின்னமாக மாறியுள்ளது

சங்கு சின்னம் தனியொரு கட்சியின் சின்னமாக மாறியுள்ளதெனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டு இந்த விடயத்தைக் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்களது தரப்பு ஏலவே கூறியதை போன்று சங்கு சின்னம் தனியொரு கட்சியின் சின்னமாக மாறியுள்ளதெனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் குற்றம் சுமத்தியுள்ளார்.

சங்கு சின்னம் அரசியல் பேதங்களைக் கடந்த பொதுச் சின்னமாக இருக்குமெனக் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதி காற்றில் பறந்து விட்டதாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.