சக மாணவியை தொடர்ந்து ஒரு வருடமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய 22 மாணவர்கள்!

வெல்லவாய – தனமலவில பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை, அதே பாடசாலையில் பயிலும் 22 மாணவர்கள், ஒரு வருடமாக தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனமலவில பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய 22 மாணவர்கள் மற்றும் அதற்கு துணையாக இருந்த அனைவரையும் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான உண்மைகளை மறைத்தமைக்காக அந்த பாடசாலையின் அதிபர் உட்பட அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்