
சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மற்றும் கனடா பிராந்தியத்திற்கு நடுவே அமைந்துள்ள யுகோன் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கமானது 7 மெக்னிடியுட்டாக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம்
அலாஸ்கா மற்றும் கனடாவின் யூகோன் (Yukon) பிரதேசத்தின் எல்லையில் உள்ள இப்பிராந்தியத்தில், கடந்த 24 மணி நேரத்திற்குள் பல சிறியளவான தொடர்ச்சியான நிலநடுக்கங்களுக்கு மத்தியில் இந்த பாரிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அச்சம் அடைந்து வீதிகளில் தஞ்சம் தஞ்சம் அடைந்தனர்.
சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் மற்றும் தேசிய வானிலை மையமும், எந்த சுனாமி முன்னெச்சரிக்கையினையும் விடுக்கவில்லை என என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
