க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவரின் விபரீத முடிவு!

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் 4 ஆம் பிரிவில் உள்ள வீட்டில் 17 வயதுடைய மாணவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் நேற்று புதன் கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திருக்கோவில் 4 ஆம் பகுதியைச் சேர்ந்த இம்முறை தரம் 11 க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதிய வினாயகமூர்த்தி விமிர்சன் (வயது – 17) என்பவரே உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக திருக்கோவில் வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.