
க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவிகள் வீடு திரும்பவில்லை
-பதுளை நிருபர்-
கல்வி பொது தராதர சா.த பரீட்சை எழுதிய இரண்டு மாணவிகள் பரீட்சை நிறைவடைந்த பின்னர் வீடு திரும்பவில்லை என மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் குறித்த மாணவிகளின் பெற்றோரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவிகள் இலக்கம் 8/23, சேரான,அராவத்த, மஹியங்கனை மற்றும் இதிபிடிய, தம்பராவ, மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த மாணவிகள் என மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
பரீட்சைகள் இறுதி தினமான நேற்று பாடசாலை சீருடையில் மஹியங்கனை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றிற்கு பரீட்சை எழுதுவதற்காக சென்ற இரண்டு மாணவிகள் வீடு திரும்பவில்லை எனவும் இரண்டு மாணவிகளையும் தேடும் பணியில் பொலிஸாரும், பெற்றோரும், உறவினர்களும் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் தலைமையதிகாரியின் தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
