க.பொ. த சாதாரண தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு
2024 (2025) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதிகள் வெளியாகியுள்ளன.
2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை சாதாரண தரப் பரீட்சை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை, 1911, 0112784208, 0112784537 மற்றும் 0112786616 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்