க.பொ.த.சாதாரண தரப்பரீட்சைக்காக விஷேட நடவடிக்கை

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில், பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை பணிக்குழாமினர் பரீட்சை மண்டபங்களுக்கு செல்வதற்காக விஷேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ தர்மசேன தெரிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சாலைகளில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் மற்றும் பணிக்குழாமினரின் வாகனங்களுக்கான டீசலை விநியோகிக்கும் பணிகள் தற்போது இடம்பெறுவதாக, அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் உரிய ரயில் சேவைகள் இடம்பெறும் என ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், நாட்டில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பரீட்சைக்கு செல்வோர் வரிசையில் காத்திருக்காது பெற்றோலை பெற்றுக் கொள்ள வாய்ப்பு வழங்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பொதுமக்களை கோரிக்கை விடுத்துள்ளார்.