க.பொ.த உயர்தர மாணவி உயிரிழப்பு

கிளிநொச்சி புன்னைநீராவி பகுதியில் நேற்று புதன் கிழமை பாடசாலை மாணவி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

க.பொ.த உயர்தரத்தில் பயிலும் பாவலன் பானுசா (வயது – 18)என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .