“க்ளீன் ஶ்ரீலங்கா” வேலைத்திட்டம் நாளை மறுதினம் ஆரம்பம்
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் நாளை மறுதினம் புதன் கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அண்மையில் ஜனாதிபதி செயலணி ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஜனாதிபதி செயலாளர் கலாநிதி என்.எஸ்.குமாநாயக்க, பதில் பொலிஸ்மா அதிபர் மற்றும் முப்படை தளபதிகள் உள்ளிட்ட 18 உறுப்பினர் குறித்த ஜனாதிபதி செயலணியில் அடங்குகின்றனர்.
க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தைத் திட்டமிடல், அமுல்படுத்தல், மீளாய்வு செய்தல் மற்றும் நிறைவு செய்தல் என்பன குறித்த ஜனாதிபதி செலயணிக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளாகும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
- https://minnal24.com/wp-admin/index.php
- செய்திகள்
- நிகழ்வுகள்
- உலக செய்திகள்
- Videos