
கோவ்பே அறிமுகம்: வருவாய் இழந்த அஞ்சல் துறை
போக்குவரத்து அபராதங்களுக்கான (GovPay) கோவ்பே கட்டண நுழைவாயிலை அறிமுகப்படுத்தியதால் இலங்கையின் அஞ்சல் துறை கணிசமான வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் அஞ்சல் துறைக்கு ஆண்டு வருவாயில் ரூ. 600 மில்லியன் முதல் ரூ. 800 மில்லியன் வரை இழப்பை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை எதிர்க்கவில்லை என்பதை வெளிப்படுத்திய அஞ்சல் தொழிற்சங்கம், அஞ்சல் துறையால் வடிவமைக்கப்பட்ட எஸ்எம்எஸ் அபராத முறையை ஆரம்பிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவ்பே ஆன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறை ஒரு முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், அதன் எஸ்எம்எஸ் அபராத முறையைத் திருத்தி ஒருங்கிணைக்குமாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
