கோவிலூர் செல்வராஜனின் “கிழக்கிலங்கையின் மறைந்த இலக்கிய ஆளுமைகள்” நூல் வெளியீடு!
-மட்டக்களப்பு நிருபர்-
ஊடகலியலாளரும், எழுத்தாளரும், பாடலாசிரியரும் எனப் பன்முக ஆளுமை கொண்ட கோவிலூர் செல்வராஜன் எழுதிய ‘கிழக்கிலங்கையின் மறைந்த சில இலக்கிய ஆளுமைகள்’ நூல் கல்முனை நெற் வலையமைப்பினால் நேற்று சனிக்கிழமை கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது.
ஓய்வுநிலை அதிபர் கா. சந்திரலிங்கம் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில், அதிதிகளாக அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் வே. ஜெகதீசன், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி. ஜே. அதிசராஜ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது நூல் வெளியீட்டுரையை வே. அரவிந்தனும், வாழ்த்துரையை தினகரன் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான க.குணராசாவும், நூல் அறிமுக உரையை சஞ்சீவி சிவகுமாரும் ஆற்றினர்.
அதிதிகள் உரையை தொடர்ந்து நூலாசிரியர் பதிலுரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியை பாசம் புவி தொகுத்து வழங்கினார்.
செல்லத்துரை சுரேஸின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.
கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் வாழ்ந்து மறைந்த இலக்கிய ஆளுமைகள் 38 பேரின் குறிப்புகள் அடங்கிய முதற்கட்ட ஆவண நூலாக இது வெளி வந்துள்ளது அடுத்த பாகமும் ஏனையோரின் குறிப்புக்களுடன் வெளியிடப்படும் என நூலாசிரியரும், கல்முனை நெற் குழுமத்தினரும் இதன்போது தெரிவித்தனர்.
இந் நிகழ்வில் மறைந்த இலக்கிய ஆளுமைகளின் குடும்ப உறவினர்கள், இலக்கிய ஆர்வலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்