
கோவிலில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு
நுவரெலியா பொரலஸ்கமுவ பகுதியிலுள்ள கோவில் ஒன்றிலிருந்து கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறை பகுதியை சேர்ந்த இந்திக லக்மான் (வயது – 38) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் நேற்று செவ்வாய் கிழமை இரவு குறித்தப் பகுதியிலுள்ள கோவிலுக்கு அருகிலுள்ள கோழி விற்பனை செய்யும் கடைக்கு தனது முச்சக்கரவண்டியில் கோழி இறைச்சி கொள்வனவு செய்ய சென்றதையடுத்தே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
