
கோழி குழம்பிற்கு பதிலாக கத்தரிக்காய் குழம்பு: கணவனின் கொடூர செயல்
இந்தியாவில் தெலங்கானா மாநிலம் மஞ்சரி மாவட்டத்தில் கோழி குழம்பிற்கு பதிலாக கத்தரிகாய் குழம்பு வைத்ததால் மனைவியை கொலை செய்த கணவன்.
கிஷ்தம்பேட் கிராமத்தை சேர்ந்தவர் பேஷம் மற்றும் சங்கரம்மாவிற்கு சந்தோஷ் என்ற மகன் உள்ளார். கடந்த புதன் கிழமையன்று கோழிக்கறி வாங்கி வந்த பேஷம் மனைவியிடம் கோழிக்குழம்பு வைக்குமாறு கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் சங்கரம்மா கோழிக்குழம்பு வைப்பதற்கு பதிலாக கத்திரிக்காய் குழம்பு வைத்துள்ளார்.
மதுபோதையில் வீடு திரும்பிய பேஷம், கோழிக்குழம்பிற்கு பதில் கத்திரிக்காய் குழம்பு இருப்பதைக் கண்டு ஆதிரமடைந்துள்ளார், இதனால் இரவு முழுவதும் கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம் முற்றியது.
இந்த நிலையில் இருவரும் அறையினுள் சென்று உறங்கியுள்ளனர், காலை மதுபோதையில் இருந்து விழித்து, மனைவியை பார்த்த பேஷமுக்கு ஆத்திரம் அடங்கவில்லை, வீட்டில் இருந்த கோடாரியை கொண்டு வந்து சங்கரம்மாவை கொத்திகொன்றுவிட்டு வீட்டை விட்டு தப்பியோடியுள்ளார்.
தாயின் அலறல் சத்தம் கேட்டு விழித்து ஓடிவந்த மகன் தாய் ரத்த வெள்ளத்தில் இருப்பதை கண்டு உறைந்து போனார். அக்கம்பக்கத்தினர் சக்கரம்மாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர், ஆனால் சங்கரம்மா ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார் தப்பியோடிய பேஷமை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
