கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலைகளை குறைக்க தீர்மானம்
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
வெட் வரி அதிகரிப்பினால் இறக்குமதி செய்யப்படும் கால்நடை தீவனத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டால் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலைகளை குறைக்கும் தீர்மானத்தில் மாற்றம் ஏற்படலாம் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .
