
கோழி இறைச்சி மற்றும் முடடையின் விலை மேலும் அதிகரிக்கும்
முட்டை மற்றும் கோழி இறைச்சி என்பனவற்றின் விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும், என அகில இலங்கை கோழிப்பண்ணை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
விலங்குணவுகளின் விலைகள் அதிகரித்துள்ளமையால், தமது தொழில்துறையில் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதால், தமது தொழில்துறையை முன்னெடுப்பதற்கு நிவாரணம் வழங்குமாறு, அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது சந்தையில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாக உள்ளது.
நகர்ப்புறங்களில் உள்ள சிறு குழந்தைகளில் சுமார் 30 சதவீதமானோர் புரதச் சத்து குறைப்பாட்டுடன் உள்ளனர்.
இந் நிலையில், பொதுமக்களுக்கு முட்டை மற்றும் கோழி இறைச்சி என்பனவற்றைப் பெற்றுக் கொள்ள முடியாவிட்டால், புரதச் சத்து குறைப்பாடு ஏற்படும் நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
