
கோழிச் சண்டை 7 பேர் கைது!
மட்டக்களப்பு வாழைச்சேனை, நாவலடி பிரதேசத்தில் கோழிச் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் நேற்று சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டனர்.
நாவலடி பிரதேசத்தைச் சேர்ந்த 26 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 6 சண்டை கோழிகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பவை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டதுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
