
கோள்மண்டலத்தை பொதுமக்கள் பார்வையிட தடை
இலங்கை கோள்மண்டலத்தை நாளை செவ்வாய் கிழமை முதல் மார்ச் மாதம் 12 வரை பொதுமக்கள் பார்வையிட முடியாதவாறு மூடவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கோள் மண்டலத்தை அவசரமாக பழுதுபார்க்க வேண்டியுள்ளதால், தேவையான பராமரிப்புப் பணிகளை எளிதாக்கும் வகையில் இந்த காலகட்டத்தில் கோள்மண்டலத்தை பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
