கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் பாதீடு நிறைவேறியது!

மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், இன்று திங்கட்கிழமை நிறைவேறியது.

கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகர் தலைமையில், மாதாந்த கூட்டம் சபா மண்டபத்தில் நடைபெற்ற போது, 17 வாக்குகளால் 2026 ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கை நிறைவேறியது.

சபை அமர்வின் போது இயற்கை அனர்த்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கு மௌன நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்துக்கு, 26 உறுப்பினரைக் கொண்ட சபையில், பதினேழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்

தமிழரசு கட்சியை சேர்ந்த பத்து உறுப்பினர்களும், முஸ்ஸிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூன்று உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை சேர்ந்த ஒரு உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் என 17 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் எதிராக வாக்களித்ததுடன்,
தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.

முஸ்ஸிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு உறுப்பினர் கலந்து கொள்ளவில்லை.

வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய தவிசாளர், சகல உறுப்பினர்களையும் சேர்த்து கொண்டு வேலை செய்ய இருப்பதாவும், இவ் வரவு செலவு திட்டம் சமூக மட்ட அமைப்புக்களின் பரிந்துரைகளை கொண்டு தயாரிக்கப்பட்டதாகவும், தெரிவித்தார்