கோறளைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட மத்தியஸ்தர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட, 221 இலக்க மத்திய சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு, இன்றுதிங்கட்கிழமை கோறளைப்பற்று பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் மத்தியசபை தவிசாளர் த.இதயராஜா தலைமையில் இடம்பெற்றது
கடந்த காலங்களில் மத்திய சபையிலும் கடமையாற்றிய உறுப்பினர்களுக்கும், புதிதாக தெரிவு செய்யப்பட்ட தவிசாளர், பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கான நியமன கடிதங்கள் பிரதேச செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டது .
நிகழ்வில் உரையாற்றிய பிரதேச செயலாளர் ஜெயானந்தி திருச்செல்வம்,
மத்திய சபைகள் சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் 1988/72ம் இலக்க சட்டத்தின் படி, இலங்கையில் சமூக மாற்றத்தில் நடக்கும் பிரச்சனைகளை தீர்க்கும் பொருட்டு ஒரு பிரதேச செயலத்துக்கு ஒரு மத்திய சபை உருவாக்கப்பட்டது .
இம் மத்தியஸ்த சபையில் தீர்க்கப்பட்ட வழக்குகள் தொடர்பில், எனக்கோ அல்லது ஏனைய திணைக்களங்களுக்கோ எந்தவிதமான முறைப்பாடுகளும் கிடைக்கப் படவில்லை, அங்கு ஒரு சிறப்பான நிர்வாகம் இடம்பெற்றுகொண்டு வருகிறது என தெரிவித்தார்.
மத்தியஸ்த சபை உறுப்பினர்களையும் அவர் பாராட்டினார்
இந் நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வில், பிரதேச செயலாளர் ஜெயானந்தி திருச்செல்வம் மற்றும் உதவி பிரதேச செயலாளர், நிருவாக உத்தியோகஸ்தர், கணக்காளர், பதவி நிலை உத்தியோகத்தர்கள், தபால் நிலைய உத்தியோகஸ்தர், இந்து கல்லுரியின் பிரதி அதிபர், கிராம உத்தியோகஸ்தர், மத்தியஸ்த சபைக்கான அபிவிருத்தி உத்தியோகஸ்தர், மத்தியஸ்த சபையின் முன்னாள் தலைவர், மத்தியஸ்த சபை தலைவர், உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.