கோர விபத்து: பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுனரின் தலை

கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிளில் மோதியதில் அதில் பயணித்தவர் பேருந்து சில்லுகளுக்கிடையில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவரின் தலை பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி முற்றாக நசுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்