
கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி
யாழ்ப்பாணம், வடமராட்சி நெல்லியடி பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை அதிகலை 1.30 மணியளவில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
வடமராட்சி வதிரியை சேர்ந்த 28 வயது இளைஞனும், மன்னாரை சேர்ந்த 34 வயதான இளைஞனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குறித்த மோட்டார் சைக்கிள் வளைவொன்றில் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.