கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வேலைநிறுத்தம் தொடரும்

தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என தபால் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதுவரை தங்கள் பிரச்சினைகள் குறித்து எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் தொழிற்சங்கங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.

இதன் விளைவாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து தபால் நிலையங்களின் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை தங்கள் வேலைநிறுத்தத்தைத் தொடருவோம் என்று கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.