கோப்பாயில் பாடசாலைக்கு முன்பாக பெற்றோர் போராட்டம்
-யாழ் நிருபர்-
யாழ். கோப்பாய் வடக்கு றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு முன்பாக இன்றையதினம் திங்கட்கிழமை பெற்றோர் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். இதன்போது வீதி மறியலிலும் ஈடுபட்டனர்.
ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரியர்களின் அசண்டையீன செயற்பாடு, பாடசாலை நேரத்தில் ஆசிரியர்கள் தொலைபேசியில் இருத்தல், என பல குறைபாடுகளை முன்வைத்தே பெற்றோர்கள்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீதியை மறித்து போராடியதால் சிறிது நேரம் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது. இருப்பினும் பொலிஸார் நிலைமையை சரிசெய்துள்ளாதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
